இளநிலை மருத்துவம்: ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம்

சென்னை: 2024 – 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது. நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்டு 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 14-லும், மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதியும் தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!