தொகுப்பூதியத்தில் மாத சம்பளம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் கீழ் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிக்கு தொகுப்பூதியத்தில் மாத சம்பளம் 12000 (ரூபாய் பனிரெண்டாயிரம் மட்டும்) என்ற ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாவட்டத்தில் 2 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி பயன்பாட்டை அறிந்தவராகவும் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (எம்பிசி/டிசி) சார்ந்த 32 வயதுக்கு உட்பட்டவராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து சான்றிதழ்களுடன், ”மாவட்ட சமூகநல அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற அலுவலகத்தை அணுகி, வருகிற 10ம் தேதி பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு