ஜூன் மாதத்திற்கான 6 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு பாக்கி: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 6 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு பாக்கி வைத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுவதற்காக, நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீர், கடந்த ஜூன் மாதத்திற்கானது 6 டிஎம்சி. அதை இன்னும் தரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் தான் தமிழகத்திற்கு முறையான அளவு, தண்ணீர் அனுப்புங்கள் என்று கர்நாடக அரசிடம் கூற வேண்டும். எனவே போர்டு சேர்மனிடம், தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கிறது. நமக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட சொல்லுங்கள் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் செல்கிறோம்.ஜெயலலிதா ஏற்கனவே முதலமைச்சர் ஆக இருந்தார். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார். அப்போதும் இதேபோன்ற தண்ணீர் பிரச்னை ஏற்படத்தான் செய்தது. அப்போது அவர்களுக்கு தேவையான கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது. எனவே இதில் கட்சி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. நமக்கு நியாயமான, சட்டப்படி வரவேண்டிய தண்ணீரை திறந்து விடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது