ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை உயர்வு: கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைவிட 19% உயர்ந்துள்ளதாக தகவல்

சென்னை: ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக பொது விமான சேவை இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. கடந்த மாதத்திற்கான உள்நாட்டு விமான சேவை பற்றி தரவுகள் வெளியாகி இருக்கின்றன. அது 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 19% அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1 கோடியே 25 லட்சம் பேர் பயணித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது நடப்பாண்டு மே மாதத்தை விட 5% குறைவாகும். இருப்பினும் இதே நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அடுத்த ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் சேவையை வழங்கி வந்த கோ பரஸ்ட் நிறுவனம் முடங்கி இருக்கும் நிலையில் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் ஆசியா, ஆகாச ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடைந்து இருக்கின்றனர். அந்த நிறுவனங்களுக்கான வருவாயும் அதிகரித்து இருக்கிறது.

Related posts

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!