பீகாரில் சட்டப்பேரவை நோக்கி பேரணி போலீஸ் தடியடியில் பாஜ பிரமுகர் பலி?: ஜேபி நட்டா கண்டனம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற பாஜவினர் மீது போலீசார் நடத்திய தடியடியில் ஒருவர் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ஆசிரியர்பணி சேர்க்கை விதிகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அரசின் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னாவில் உள்ள சட்டப்பேரவை நோக்கி நேற்று பாஜ பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பாட்னாவில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில் பேரணியில் கலந்து கொண்ட ஜெஹனாபாத் மாவட்ட பொது செயலாளர் விஜய் குமார் சிங் போலீசாரின் தடியடியில் படுகாயமடைந்து உயிரிழந்தாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு உடனடியாக பதிலளித்து மாவட்ட நிர்வாகம், ஜெஹனாபாத் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் சுயநினைவிழந்த நிலையில் சாலையோரத்தில் கிடந்தார். அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. உடனடியாக அவர் பிஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்த விஜய்குமார் சிங் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பாஜ மூத்த தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வரான சுசில்குமார் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘‘பாட்னாவில் பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டு மோசமான தடியடி காரணமாக ஜெஹனாபாத் மாவட்ட பொது செயலாளர் விஜய்குமார் சிங் உயிரிழந்தார்” என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பாஜ தலைவர் ஜேபி நட்டா, பாஜ தொண்டர்கள் மீது தடியடி நடத்தியது மாநில அரசின் தோல்வி மற்றும் கோபத்தின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!