இணை ஆணையர்களின் நவம்பர் 2023ஆம் மாதத்திற்கான பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி மூர்த்தி, தலைமையில் நடைபெற்றது.


சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, தலைமையில் இன்று (12.12.2023) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் அனைத்து இணை ஆணையர்களின் நவம்பர் 2023ஆம் மாதத்திற்கான பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய நிதித்துறை அரசு முதன்மைச் செயலாளர் த உதயச்சந்திரன், கலந்துகொண்டு வணிகவரித்துறையில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளை விரைந்து முடிக்கவும், தரவுகள் பகிர்வுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும். சமாதான திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும் அறிவுறுத்தி, அரசின் வருவாய் இலக்கை அடைவதற்கு அனைத்து அலுவலர்களும் தத்தம் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர். மதிப்பிற்குரிய வணிகவரி ஆணையர் ஆகியோரின் உத்தரவின்பேரில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு, வணிகவரித்துறையின் அனைத்து கோட்டங்களிலிருந்தும் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அதிக அளவில் நிவாரண பொருட்கள் அனுப்பிய விருதுநகர் மற்றும் திருச்சி கோட்டங்களைச் சார்ந்த இணை ஆணையர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும், வாகன தணிக்கையின் மூலம் ரூபாய் 3.97 கோடி அரசுக்கு வருவாய் ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், மதிப்பிற்குரிய நிதித்துறை அரசு முதன்மை செயலாளர், மதிப்பிற்குரிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர். மதிப்பிற்குரிய வணிகவரி ஆணையர் ஆகியோர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச்செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) வே. இரா. சுப்புலெட்சுமி கலந்துகொண்டனர்

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது