மேலும் ஒரு பாஜ எம்பி காங்கிரசில் சேர்ந்தார்

ஜெய்ப்பூர்: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மேலும் ஒரு எம்பி பாஜ கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாளில் அறிவிக்கப்பட உள்ளது. அரியானா மாநிலம், ஹிசார் மக்களவை தொகுதி பாஜ எம்பி பிரிஜேந்திர சிங் நேற்று முன்தினம் கட்சியில் இருந்தும் எம்பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம்,சுரு தொகுதி எம்பி ராகுல் கஸ்வான் என்பவரும் நேற்று பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜ வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதனால் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து ராகுல் கஸ்வான் டிவிட்டரில் பதிவிடுகையில், மக்களவை உறுப்பினராக சேவையாற்ற 2 முறை வாய்ப்புளித்த பிரதமர் மோடி மற்றும் அந்த கட்சியின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரசியல் காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சுரு தொகுதியில் பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜாஜரியாவுக்கு பாஜ சீட் கொடுத்துள்ளது.

 

Related posts

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை