கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகினால் முழுக்கட்டணம் ரிட்டர்ன்: யுஜிசி உத்தரவு

புதுடெல்லி: கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தருவது பற்றி பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும். அக்டோபர் 31 அல்லது அதற்கு முன் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்