வேலை தேடும் வாலிபருக்கு ரூ.3.50 கோடி ஜிஎஸ்டி கலெக்டரிடம் புகார்

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த முகமது நயிமுதீன் என்பவர் அளித்த மனுவில், டிப்ளமோ முடித்து வேலை தேடி வருகிறேன். கடந்த மார்ச் மாதம் என் செல்போனுக்கு ஒரு ‘குறுஞ்செய்தி’ வந்தது. அதில் 2023-2024க்கான ‘வருமான வரி’ தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனது பான் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, ‘என்.எம்.எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனம், துடியலூர், கோவை முகவரியில் இயங்கி வருவதும், அதற்கான ஜிஎஸ்டி எண், என்னுடைய பெயரில் துடியலூர் சர்கிள் கோவை டிவிசனிலிருந்து பெறப்பட்டதும் தெரியவந்தது. ஜிஎஸ்டி போர்டலில் ஆய்வு செய்தபோது, என் பெயரில் போலியாக நிறுவனம் நடத்தி, லட்சக்கணக்கில் பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது. கடந்த மாதம் வரை எனக்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.3.50 கோடி கட்டும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்