5 மாதமாக வேலை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் 100 நாட்கள் பணி வழங்கவில்லை என ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவூர் ஊராட்சியில் கடந்த 5 மாதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரம்யா ஆகியோர் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர், அடுத்த வாரத்தில் இருந்து அனைவருக்கும் வேலை வழங்குவதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .

Related posts

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி