10 ஆண்டுகளில் 5.1 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிப்பு: மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றதன் மூலம் 5.1 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; உயர்பதவிகளில் நேரடி |நியமனங்கள் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓ.பி.சி. இடஒதுக்கீடு உரிமையை மோடி அரசு ஒழிக்கிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு, ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குன் தாரை வார்க்கப்படுகிறது. இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை மாற்றும் பாஜகவின் சக்கர வியூகம் இதுதான்.

கடந்த 10 ஆண்டுகளில் 5.1 லட்சம் வேலை வாய்ப்புகள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கவிடாமல் செய்துவிட்டது மோடி அரசு. 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றதன் மூலம் 5.1 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுத்துறைகளில் 91 சதவீத ஊழியர்கள் தினக்கூலியாகவும் ஒப்பந்த தொழிலாளர்களாகவுமே நியமிக்கப்படுகின்றனர். 2022-23-4 ம் ஆண்டில் ஒன்றிய அரசு பணிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக்கான 1.3 லட்சம் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்