மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் : வாடிக்கையாளர்கள் ஷாக்

சென்னை : மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ‘பிரி பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ்’ கட்டணங்களை உயர்த்த உள்ளன. நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை வழங்கி வருகின்றன. வோடபோன் நிறுவனம் விரைவில், 5ஜி சேவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை, 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளன. குறிப்பாக சிக்னல் டிராஃபிக்கை குறைப்பதற்காக அதிக அளவிலான செல்போன் டவர்கள் மற்றும் கேபிள்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டு வருகின்றன. ஆகவே முதலீடுகளை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 4G, 5G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10-17% சதவீதம் உயர்த்துவதை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்