நாட்டில் ஏழைகள், பழங்குடியினர், அப்பாவி மக்களை ஒடுக்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போரிட ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அழைப்பு

டெல்லி : நாட்டில் ஏழைகள், பழங்குடியினர் மற்றும் அப்பாவி மக்களை ஒடுக்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போரிட ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்துள்ளார். நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று அவரை அதிரடியாக கைது செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய போவதை குறிப்பிட்டு சோரன், தனது வீட்டில் பதிவு செய்த காணொளி வெளியாகி உள்ளது.

அதில், எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்கத்துறை தன் மீது குற்றச்சாட்டை வைத்து இருப்பதாக சோரன் கூறியிருந்தார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனே டெல்லி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், ஏழைகள், பழங்குடியினர் மற்றும் அப்பாவி மக்களை ஒடுக்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அமலாக்கத்துறையின் இந்த செயலால் துவண்டு விடமாட்டேன் என்று சூளுரைத்துள்ள ஹேமந்த் சோரன், புதிய யுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்றும் இந்த வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்றும் கூறினார். இந்த நிலையில் கைது நடவடிக்கை எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் முறையீடு செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்