அமெரிக்காவில் இந்தியர் கடைகளை குறி வைத்து நகைகள் கொள்ளை

வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலம்பியா மாகாணம் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வர்ஜீனியா மற்றும் ஃப்ளோரிடா ஆகிய 4 பகுதிகளில் இந்திய அமெரிக்கர்கள் நகை கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த கடைகளை குறி வைத்து 2022 ஜனவரி 7 முதல் 2023 ஜனவரி 27 வரை தொடர்ந்து ஒரு வருட காலமாக பல்வேறு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. ஆயுதங்களை ஏந்தி முகமூடி அணிந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடை உரிமையாளர்கள், ஊழியர்களை பயமுறுத்தி, தாக்குதல் நடத்தி கொள்ளைகளை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

Related posts

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தலைவர்கள், வேட்பாளர்கள் வீதிவீதியாக ஓட்டு வேட்டை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை: சென்னை, கரூரில் 7 இடங்களில் சிபிசிஐடி அதிரடி, மனைவியிடமும் விசாரணை