முகப்பேரில் 17 சவரன் கொள்ளையில் கோவையில் 3 கொள்ளையர் கைது

அண்ணாநகர்: முகப்பேரில் கொள்ளையடித்துவிட்டு கோவையில் பதுங்கியிருந்த திருடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் வையாபுரி(70). இவர் கடந்த 1ம்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டு 3ம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகைகள், 20 ஆயிரம் கொள்ளைப்போனது தெரிந்தது. இதுகுறித்து வையாபுரி கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து நொளம்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

நேற்றுமுன்தினம் முகப்பேர் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டபோது ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26) என்பதும் வையாபுரி வீட்டில் கொள்ளையடித்தவர் என்பதும் தெரிந்தது. இவரது நண்பர்கள் 2 பேர், கோவை மாவட்டத்துக்கு தப்பிச்சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர் கொடுத்த தகவல்படி, கோவையில் பதுங்கியிருந்த ஆவடி பகுதியை சேர்ந்தஅகில்குமார்(21), காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்கி(எ) விக்னேஷ்(19) ஆகியோரை கைது செய்து 17 சவரன் நகை மற்றும் 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்