சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 45,160க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவும் வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து நகை விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் ஏற்றமும், இறக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,645க்கும், சவரன் ரூ.45,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு