ஜீவசமாதி அடைய வைக்க முயன்ற சாமியார் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பைபாஸ் சாலை மேலவாணியங்குடியில் ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மதுரையை சேர்ந்த சுரேந்தர் சுவாமி (70), தங்கியிருந்து அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். அறக்கட்டளை பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த நிலையில் இதில் பலர் உறுப்பினராக இருந்துள்ளனர். இந்நிலையில், சுரேந்தர் சுவாமி உடல் நலமின்றி உள்ளதாகவும், அவரை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும், அவர் ஜீவசமாதி அடைந்து விட்டதாக கூறுவதற்காக, அதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையில் உறுப்பினர்களாக உள்ள சிலர் செய்வதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் சிவகங்கை நகர் போலீசார் மடத்தில் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த சுரேந்தர் சுவாமியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேந்தர் சுவாமி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு