ரயில்வே வாரியத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா பொறுப்பேற்பு!!

புதுடெல்லி: ரயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பெண் அதிகாரியான ஜெயா வர்மா சின்கா பொறுப்பேற்றுக் கொண்டார். ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள அனில் குமார் லகோட்டி ஓய்வு பெற்றார். இதையடுத்து ரயில்வே வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்கா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஜெயா வர்மா பதவியேற்றுக் கொண்டார். அவர் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை பதவி பதவியில் இருப்பார் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

அலகாபாத் பல்கலைகழகத்தில் பட்டம் பயின்ற ஜெயா வர்மா கடந்த 1988ம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து பிரிவில்(ஐஆர்டிஎஸ்) சேர்ந்தார். வடக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே,தென் கிழக்கு ரயில்வே ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் ரயில்வே ஆலோசகராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அவர் பதவியில் இருந்த போது கொல்கத்தா- டாக்கா இடையே மைத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை