ஜாவா 350

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், ஜாவா 350 என்ற புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 22.5 எச்பி பவரையும், 28.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட், டூயல் சானல் ஏபிஎஸ் உள்ளன. பழைய ஜாவா பைக்கை நினைவூட்டும் வகையில் ஸ்போக் வீலுடன் இது அறிமுகம் ஆகியுள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.99 லட்சம். இதே இன்ஜின் திறன் கொண்ட முந்தைய ஜாவா பைக்கை விட இது சுமார் ரூ.16,000 குறைவாகும். அலாய் வீலுடனும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். புதிதாக 3 வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அலாய் வீல் வேரியண்ட் சுமார் ரூ.2.08 லட்சம், டாப் வேரியண்டான குரோம் வேரியண்ட்டில் ஸ்போக் வீல் கொண்டது ரூ.2.15 லட்சம் ; அலாய் வீல் கொண்டது ரூ.2.23 லட்சம்.

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!