ஜப்பானில் நிலநடுக்க பலி 73ஆக அதிகரிப்பு

டோக்கியோ: ஜப்பானில் செவ்வாயன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்வுகள் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 73ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், தீயணைப்பு துறை மற்றும் மோப்ப நாய்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இஷிகாவா மாகாணம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 72 மணி நேரம் மிக முக்கியமானதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் 3 நாட்களுக்கு பின் உயிரோடு இருப்பது கடினமாகும்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது