டெல்லி :மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் சிலருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட பட்டியலில் 150 முதல் 160 இடங்களுக்கு LIVE வேட்பாளர்களை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் மத்திய தேர்தல் குழு இந்த மாத இறுதியில் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.