ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடி

சிம்லா: பிரதமர் மோடி ஆண்டுதோறும் பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்புப்படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள எல்லை பாதுகாப்புப்படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

அதேவேளை, 2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் எல்லை பாதுகாப்புப்படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.இந்நிலையில், இந்த ஆண்டு இமாச்சலபிரதேசத்தில் சீனாவுடனான எல்லை பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். இமாச்சலபிரதேசத்தின் லிப்ஷா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி சீனாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம், இந்தோ-தீபெத் எல்லை போலீஸ் படையினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகிறார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்