ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்முவில் மலைப்பாதை ஒன்றில் இறங்கும்போது பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் கீழே குதித்து உயிர்தப்பினார்கள். ஜம்முவில் உள்ள நெடுஞ்சாலை 44ல் பயணிகலப்பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ரம்பான் அருகே சரிவான பாதையில் பேருந்து இறங்கிய போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை.

இது குறித்து பேருந்து ஓட்டுநர் பயைகளிடம் கூறியதை அடுத்து அச்சமடைந்த பயணிகள் ஒருவர் பின் ஒருவராக ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்தனர். பயணிகளின் அபய குரலை அடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த ராணுவ வீரர்களும் ஜம்முகாஷ்மீர் காவல் துறையினரும் ஓடி சென்று சக்கரத்தில் கற்களை வைத்து பேருந்து மலைச்சரிவில் கவிழாமல் தடுத்து நிறுத்தியதுடன் எஞ்சிய பயணிகளையும் மீட்டனர். ஓடும் பேருந்திலிருந்து குதித்ததால் காயமடைந்த 10 பயணிகளை ராணுவ வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்