ஜம்முவில் 5 முறை நிலநடுக்கம்

தோடா: ஜம்முவின் தோடாவில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தினால் பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்க சம்பவத்தில் இரண்டு பள்ளி சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று 5 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல் இல்லை. நீண்ட நேரத்திற்கு பின்னரே பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.

Related posts

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்