ஜமாபந்தி நிறைவு விழாவில் 106 மனுக்கள் மீது தீர்வு: கலெக்டர் சான்று வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடந்த ஜூன் 7ம் தேதி துவங்கிய ஜமாபந்தி 8 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 757மனுக்களில் 106மனுக்களுக்கு நேற்று தீர்வு காணப்பட்டது. பொதுமக்களுக்கு கலெக்டர் சான்றுகள் வழங்கினார். கடந்த ஜூன் 7ம் தேதி துவங்கிய ஜமாபந்தி 8 நாட்கள் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. இதில், வட்டாட்சியர் பிரீத்தி, பிடிஒ சந்திரசேகர், மண்டல துணை வட்டாட்சியர் ரதி, முன்னிலை வகித்தனர். இதில், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 81 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 757 மனுக்களை அளித்தனர்.

பின்னர் பட்டா மாறுதல் முழு எண் 153, பட்டா மாற்றம் உட்பிரிவு 134, வீட்டுமனை பட்டா 286, சமூக பாதுகாப்பு திட்டம் 104, பட்டா மேல் முறையீடு 62, குடும்ப அட்டை பெறுதல் 13, இதர சான்றிதழ் 5 உள்ளிட்ட 657 மனுக்கள் பரிசீலனையில் செய்யப்பட்டது இதில் உடனடியாக 106 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மக்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்