ஜால்னாவில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிச் சூடு..பேருந்துகளை கொளுத்திய போராட்டக்கார்கள்

மும்பை : மராட்டிய மாநிலம் ஜால்னாவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பட்டினி போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி இருப்பதற்கு கண்டனம் வலுத்துள்ளது. மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஜால்னா மாவட்டத்தில் உள்ள Antarwali Saraati கிராமத்தில் மராத்தா சமூகத்தினர் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் போராட்டக்காரர்களும் போலீசாருக்கும் இடையே நேற்றைய தினம் மோதல் வெடித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். உண்ணாவிரதப் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்ததை அடுத்து துலே -சோலாப்பூர் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்துகளை வழிமறித்து போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். வன்முறையில் 40க்கும் அதிகமான போலீசார் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை-மஸ்கட் இடையே கூடுதலாக புதிய நேரடி விமான சேவையை தொடங்கியது சலாம் ஏர்” நிறுவனம்..!!

காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்: செல்வபெருந்தகை வேண்டுகோள்

ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுவதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு