காசர்கோடு அருகே சிறுமியை 8 ஆண்டு பலாத்காரம் செய்தவருக்கு 97 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே உத்யாவார் பகுதியை சேர்ந்தவர் செய்யது முகமது பஷீர் (46). துபாயில் பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2017 வரை இவரது உறவினரான ஒரு சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து ஆபாச வீடியோ காண்பித்து பலாத்காரம் செய்துள்ளார். 8 ஆண்டுகள் இது தொடர்ந்துள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன் இந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியை அவரது பெற்றோர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, டாக்டர்களிடம் தான் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை அந்த சிறுமி கூறினார். இது குறித்து மஞ்சேஸ்வரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, செய்யது முகமது பஷீரை கைது செய்தனர். இந்த வழக்கு காசர்கோடு மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ், குற்றம் சாட்டப்பட்ட செய்யது முகமது பஷீருக்கு 97 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.8.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!