மளிகை பொருளை வெளியில் விற்ற சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறைக்கு, கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் கள்ளத்தனமாக விற்பதாக தகவல் கிடைத்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் சிறை விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, வெளி விற்பனைக்காக 23 மூட்டைகளில் வைத்திருந்த அரிசி, பருப்பு, நிலக்கடலை, ஆயில் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு தரமான பொருட்களை மளிகை கடைகளுக்கு கொடுத்து தரம் குறைந்த பொருட்களை அங்கிருந்து சிறைக்கு அனுப்புவதும் தெரியவந்தது. இதுபற்றி விசாரணை நடத்திய சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வைஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு