சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆஜராகாததால் சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது பெங்களூரு நீதிமன்றம்..!!

பெங்களூரு: சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது. மேலும், சிறைத்துறை அதிகாரிகள் 4 பேர் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த வழக்கு கர்நாடகா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராகவில்லை. முதல் வாய்தாவுக்கு சசிகலா நேரில் ஆஜரான நிலையில் அதன் பிறகு ஒரு வாய்தாவுக்கு கூட யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி விசாரணையை அக்டோபர் 5-க்கு ஒத்திவைத்தார்.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்