சொத்து குவிப்பு வழக்கில் வெள்ளிக்கிழமை தோறும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ஜெகன்மோகன்

திருமலை: சொத்து குவிப்பு வழக்கில் வெள்ளிக்கிழமைதோறும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ஜெகன்மோகன் உள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். ஏற்கனவே இந்த வழக்கில் 18 மாதம் சிறையில் இருந்த ஜெகன் மோகனுக்கு நிபந்தனை அடிப்படையில் சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அதன் பிறகு தேர்தலின் வென்று கடந்த கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார். முதல்வர் என்ற முறையில் ஜெகன் மோகனுக்கு நிர்வாக பொறுப்புகள் காரணமாக இத்தனை ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.

காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை ஜெகன்மோகன் ராஜினாமா செய்தார். இருப்பினும் கவர்னர் அப்துல் நசீம் புதிய அரசு பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு வரும் 12ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் இனி வெள்ளிக்கிழமை தோறும் ஐதராபாத் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு