விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது

சென்னை: விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார் . துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து சேலம் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலை. துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை