திருமண அழைப்பிதழ் கொடுத்தார்: சந்திரபாபுநாயுடுவை சந்தித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் தங்கை


திருமலை: திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடுவை ெஜகன் தங்கை ஷர்மிளா சந்தித்தார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் சகோதரிஒய்எஸ் ஷர்மிளா கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார். இந்தநிலையில் ஒய்எஸ் ஷர்மிளா ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபுநாயுடுவை நேற்று அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். அப்போது ஷர்மிளா தனது மகன் ஒய்.எஸ்.ராஜாவின் திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்க திருமண அழைப்பிதழை வழங்கினார்.

பின்னர் ஷர்மிளா கூறியதாவது: சந்திரபாபுநாயுடுவை சந்தித்தது எனது மகன் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதிக்கச் வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். சந்திரபாபுவை சந்தித்ததில் அரசியல் தொடர்பு இல்லை. இப்போது சந்திரபாபுவை திருமணத்திற்கு மட்டும் அழைக்க வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஜெகன் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்பி ராஜினாமா: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக மாநில ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலசவுரி உள்ளார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து வேறு ஒருவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த தகவல் அதிர்ச்சி அடைந்த எம்பி பாலசவுரி நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னதாக கர்னூல் எம்பி டாக்டர் சஞ்சீவ் குமார் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

ராகுலை பிரதமராக்க ஒய்எஸ்ஆர் விரும்பினார்
ஒய்எஸ் ஷர்மிளா கூறுகையில்,’காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும் அதனை ஏற்பேன். ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். ராகுல் பிரதமரானால் தான் இந்த நாடு முன்னேறும் ராகுலை பிரதமராக்குவதுதான் ஒய்எஸ்ஆரின் நோக்கம்’ என்றார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது