எனது ‘பலாப்பழம்’ சின்னம் சரியா தெரியலயே ஏன்? மன்சூர்அலிகான் வாக்குவாதம்

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர்அலிகான் தனது ஜனநாயகப்புலிகள் கட்சியின் சார்பில் சுயேட்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடி மையத்துக்கு சென்ற மன்சூர்அலிகான் அங்கு வாக்குப்பதிவு நடப்பதை பார்வையிட்டார். பின்னர் டவுன்ஹாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சென்று பார்த்த மன்சூர்அலிகான், இந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லை. எனது சின்னம் பலாப்பழம் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது இயந்திரத்தில் வெளிச்சமே இல்லை. அதனால் எனது சின்னமே தெரியவில்லை. முதல் இயந்திரம் இருக்கும் பகுதியில் மட்டும் வெளிச்சம் நன்றாக தெரிகிறது. ஏன் இந்த நிலை? உடனே சரி செய்யுங்கள் என்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வெளிச்சத்துக்கு ஏற்பாடு செய்வதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி