ரத்து செய்த ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதா?.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

டெல்லி: ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்துசெய்வதாக அறிவித்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக கூறுவது முற்றிலும் தவறு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாபர் சேட்டுக்கு அரசு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்துசெய்யப்பட்டுவிட்டதால் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்டில் ஜாபர் சேட் மீதான ED வழக்கை ரத்துசெய்வதாக ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு தீர்ப்பு வழங்கியது. ரத்துசெய்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவித்ததை எதிர்த்து ஜாபர் சேட் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்துசெய்வதாக அறிவித்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. ஏற்கனவே வழக்கை ரத்துசெய்த உத்தரவை மீண்டும் திரும்பப் பெற முடியாது. ஏற்கனவே ரத்துசெய்த வழக்கின் முகாந்திரம் குறித்து மீண்டும் விசாரிக்க முடியாது. ரத்துசெய்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அடிப்படை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வழக்கை ரத்துசெய்த உத்தரவில் நீதிபதி கையெழுத்திடாததால் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஜாபர் சேட் வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரித்து உரிய தீர்ப்பை வழங்கும் என்றும் கூறினர்.

Related posts

தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி இலங்கை அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ்

மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியையொட்டி சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தாமதமாகும் என அறிவிப்பு

இபாஸ்: 5 மாதத்தில் நீலகிரிக்கு 13 லட்சம் பேர் வருகை