ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஜாபர் சேட் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கை ரத்துசெய்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜாபர் சேட் வழக்கு தொடர்ந்தார். ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்துசெய்வதாக அறிவித்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக கூறுவது தவறு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரத்துசெய்த வழக்கின் முகாந்திரம் குறித்து மீண்டும் விசாரிக்க முடியாது என ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில் கொடியேற்றத்துடன் புரட்டாசி திருவிழா துவக்கம்: 13ம் தேதி தேரோட்டம்

மழைகால முன்னெச்சரிக்கை குறித்து விமான நிலைய இயக்குனருடன் பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முதல்வருக்கு நன்றி தீர்மானம்