ஐவிஆர் இ-வாலட் மூலம் நூதன மோசடி பொதுமக்கள் எஸ்எம்எஸ் மூலம் வரும் தகவலை நம்ப வேண்டாம்: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் அறிவுரை

சென்னை: ஐவிஆர் இ-வால்ட் பண பரிவர்த்தனை செயலி பெயரில் தற்போது பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இ-வாலட் செயலியை புதுப்பிக்க வேண்டும் என்று மர்ம நபர்கள் பொதுமக்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புகின்றனர். அதை இ-வால்ட் நிறுவனத்தில் இருந்துதான் வருகிறது என்று பொதுமக்கள் அந்த எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள் வரும், அதில் உள்ளே சென்றால், இ-வாலட் வாடிக்கையாளர் என்றால் 1 ஐ அழுத்தவும் என்று தெரிவிக்கும், அதன்படி பொதுமக்கள் 1 ஐ அழுத்தியதும் அதை உறுதி செய்ய ரகசிய எண்ணை உள்ளே பதிவு செய்ய கோரும், அதன்படி ரகசிய எண்களை பதிவு செய்ததும் இணைப்பு துண்டிக்கப்படும். அதன் பிறகு இ-வாலட் செயலியில் பொதுமக்கள் வைத்திருந்த பணம் மர்ம நபர்களால் எடுக்கப்படும். இதுபோன்ற நூதன மோசடியால் பொதுமக்கள் பலர் பணத்தை இழந்துள்ளனர். இ-வாலட் செயலியில் பணத்தை இழந்த நபர்கள் அளித்த புகாரின்படி தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம் பிரிவுக்கு இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியில் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் தொடர்பு கொண்ட நபரின் அடையாளத்தை சரிபார்க்கவும், பேடிஎம் போன்ற எந்தவொரு சேவையும் உங்கள் ஓடிபியை தொலைபேசியில் பகிரும்படி கேட்க மாட்டார்கள். உங்கள் ஓடிபியை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல்கள் மூலமாக யாருடனும் பகிர வேண்டாம்.

தெரிந்த நிறுவனத்திலிருந்து எஸ்எம்எஸ் வருவது போல் தோன்றினால் அதனை கவனமாக ஆராய வேண்டும். சந்தேகத்திற்கிடமான அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு உங்கள் வங்கி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு ெசய்தால் மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். இதுபோன்ற மோசடிக்கு யாரேனும் ஆளாகியிருந்தால் உடனடியாக சைபர் க்ரைம் உதவி எண் 1930க்கு போன் செய்து சம்பவத்தை உடனே புகாராக அளிக்க வேண்டும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு