ஐடி துறையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் அரங்கில் வருமானவரி வரித்துறையின் 164வது தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் ஒன்றிய அரசின் வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், விளையாட்டு வீரர் ஸ்ரீ காந்த், நடிகைகள் சுஹாசினி, நயன்தாரா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் வருமானவரி நாளுக்கு காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வருமான வரித்துறை தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார்.

இது குறித்து வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் கூறியதாவது: 1995-1996ம் ஆண்டு இந்த துறையின் மொத்த வருவாய் 35 ஆயிரம் கோடியாக இருந்தது. அது மொத்த வரி வருவாயில், நேரடி வரி வருவாய் 30 சதவீதம். பல்வேறு நடவடிக்கை காரணமாக 2009-10ல் 60% உயர்ந்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ. 1.08 லட்சம் கோடி வருமான வரி வசூல் ஆகி உள்ளது. மும்பை, பெங்களூரு, டெல்லிக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக வரி வசூல் செய்யப்படுகிறது. மக்கள் எளிதில் வருமான வரி செலுத்த செயற்கை நுண்ணறிவின் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளது. குறிப்பாக மெஷின் லேர்னிங், டேட்டா மைனிங் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் உள்ளிட்டவையை விரிவாக்கம் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை