ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 15ம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் வருகிற ஜூலை 15ம் ஹேதி காலை 9 மணியளவில் வடசென்னை ஆர்.கே.நகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8000 மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை