இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் வெப்பத்தால் பாதிப்பு: பகலில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்

இத்தாலி: ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெப்பம் காரணமாக இத்தாலியில் 16 நகரங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் அதீத மழைப்பொழிவு, சில நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகின்றன. வெப்பம் பற்றிய அளவீடுகள் தொடங்கப்பட்ட பின் கடந்த ஜூன் மாதம் தான் உலகின் அதிகபட்ச சராசரி வெப்பம் பதிவாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

முந்தைய காலத்தை விட சராசரி வெப்ப அளவு அடுத்த சில ஆண்டுகளில் 1.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரலாறு காணாத வெப்பம் அலை வீசி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே ஜெரன் என பெயரிடப்பட்டுள்ள வெப்ப புயல் இத்தாலியை தாக்கி இருப்பதால் ரோம் நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குளிர்ந்த தண்ணீரை பீச்சியடிக்கும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இத்தாலியில் 16 நகரங்களில் கடுமையையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சிரியா நாட்டு மக்கள் தாங்கள் போகும் இடங்களில் மினி மின் விசிறிகளை கையோடு கொண்டுசென்று சமாளித்து வருகின்றனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி