இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும் மவுண்ட் எட்னா: எரிமலை வெடிப்பால் கேடானியா விமானங்கள் ரத்து

ரோம்: உலக புகழ் பெற்ற இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது. பனிபோர்த்திய மவுண்ட் எட்னா எரிமலையில் சூடான நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கேடானியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தாலி, ரோம் நகரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிஷிலி தீவில் எட்னா எரிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,030 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் எட்னா எரிமலை அடிக்கடி வெடித்து சிதறுவது வழக்கம். எரிமலை வெடிப்பினால் கிளம்பும் சாம்பல் அருகில் இருக்கும் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவி இருக்கிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்