இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.பரபரப்பான பைனலில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்காவுடன் (26 வயது, 2வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (22 வயது, போலந்து) அதிரடியாக விளையாடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இத்தாலி ஓபனில் ஸ்வியாடெக் 3வது முறையாக பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

23 நாட்களில் மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபனில் அடுத்தடுத்து கோப்பையை முத்தமிட்டுள்ள அவர் அடுத்து நடைபெற உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரிலும் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு செரீனா வில்லியம்ஸ் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது (2013) குறிப்பிடத்தக்கது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது