இஸ்ரோவை உருவாக்கியது யார்?: சந்திரயான்-3 வெற்றியை தனதாக்கிக் கொள்ள பாஜக, காங்கிரஸ் மோதல்..!!

டெல்லி: இஸ்ரோவை உருவாக்கியதில் ஜவர்ஹலால் நேருவின் பங்களிப்பை மறைக்க பார்ப்பதாக பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்நிலையில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் கால் பாதித்த வெற்றியை தங்களுக்கு சாதகமாக்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அளித்த ஊக்கமும், அதிக நிதி ஒதுக்கீடும் தான் சந்திரயான் வெற்றிக்கு உதவியதாக பாரதிய ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலடியாக இஸ்ரோவை உருவாக்கியது நேரு தலைமையிலான ஒன்றிய அரசு என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

இஸ்ரோ உருவாக்கப்பட்டது 1969-ம் ஆண்டு. அப்போது நேரு மறைந்து விட்டார் என கூறி காங்கிரஸ் பொய் கூறுவதாக பாரதிய ஜனதா தரப்பில் கூறப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்; இஸ்ரோவின் முந்தைய வடிவம் INCOSPAR என்றும் அதை 1962-ல் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார் என்றும் தெரிவித்துள்ளார். INCOSPAR-ஐ ஏற்படுத்தும் போதும் நேருவுடன் இருந்த 1969-ல் இஸ்ரோவாக அதை மாற்றினார் என ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். மொத்தத்தில் பூமியில் மட்டுமின்றி நிலவிலும் இந்த விஷயத்தில் அரசியல் அனல் பறக்கிறது.

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு