இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 12 பேர் பலி

டெல் அவிவ்: தாக்குதலில் குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகினர். இதற்கு பெரிய விலை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் 8 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. இதில் 30,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர். காசாவில் செயல்படும் ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளதால் போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்த போரில் அமெரிக்காவும், பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேசமயம் ஏமனில் செயல்படும் ஹவுதி மற்றும் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா படையினர் காசாவை ஆளும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவை ஒட்டிய இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்று பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஹிஸ்புல்லா படையினர் நேற்று ராக்கெட்டுகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள், இளைஞர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய விலை கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்