ஹமாஸின் பாதாள உலகம்.. சுரங்க வழித்தடங்களை அழிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளை கையில் எடுக்கும் இஸ்ரேல்!!

ஜெருசலேம் : ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த 3 வாரமாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 7000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசாவின் பெரும்பகுதி தரைமட்டம் ஆன நிலையில், தரைவழியாகும் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கான ஆயிரக்கணக்கான வீரர்கள் காசா பகுதிக்குள் நுழைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய குண்டு மழை பொழிந்தும் ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் பதிலுக்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் , ஹமாஸின் 13 நிலைகளை அழித்துவிட்டதாகவும் சுரங்கப்பாதைகளை ஹமாஸ் அமைப்பினர் மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ஏவிய 8 ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க வழித் தடங்களை அழிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் முடிவு எடுத்துள்ளது. அதன் மூலம் சுரங்கங்களை நுரைகளால் மூட முடியும் என்றும் இதுவே ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதால் காசாவில் இணைய வசதி மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.அதே சமயம் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் குழு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துக்களையும் ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Related posts

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலுக்கு முக்கிய தொழில்நுட்பம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்