இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல்: சைரன் எச்சரிக்கை ஒலியால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

எருசலேம்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் சைரன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் காசா நகரம் உருக்குலைந்து. அங்கு ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்து பிணை கைதிகளை விடுவிப்பதற்காக சில நாட்கள் போர் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதலின் போது எழுப்பப்படும் சைரன் எச்சரிக்கை ஒளி எழுப்பப்பட்டது. இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்கள் நோக்கி சிதறி ஓடினர். அங்கு ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்