இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் இந்தியா தலையிட்டு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று பாலஸ்தீனம் உள்ளிட்ட பல நாடுகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பெருங்கடமை இந்தியாவுக்கு உள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிடமும் இந்தியா நல்லுறவை கடைபிடித்து வருவதால், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு, இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும், மரியாதையும் உயர்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு