இஸ்ரேலில் கூடாரப் பெருவிழாவையொட்டி நடைபெற்ற பேரணி: ஜெருசலேமில் நடந்த பேரணியில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் கூடாரத் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளை சேந்தவர்களும் கலந்து கொண்டனர். யூதர்கள் பாலைவனத்தில் வாழ்ந்த காலத்தை நினைவு கூறும் வகையில் கூடாரவிழா அரங்கேறி வருகிறது. இது இலையுதிர் கால அறுவடை திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இதற்காக இஸ்ரேலில் 7 நாட்கள் பொதுவிடுமுறையும் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெருசலேமில் நடைபெற்ற பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர். பிரேசில், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். மேள, தாளங்கள் முழங்க நடைபெற்ற பேரணியில் வண்ண மையமான உடைகளுடன் பலர் பங்கேற்றனர். ஜெருசலேமில் முக்கிய சாலைகள் வழியாக பேரணி நடைபெற்றது. இதற்காக ஆங்காங்கே இணைப்பு சாலைகள் மூடப்பட்டதால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை