இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசி முடித்ததை தொடர்ந்து லெபனான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏற்கனவே 700 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த 5 நாட்களில் லெபனானில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கிட்டத்தட்ட 1000 கிலோ எடை கொண்ட பதுங்கு குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட் பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் பிரிவு கமாண்டர் முகமது உசைன் ஸ்ரூர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Related posts

தேனியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!