இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு மோடி அமைச்சரவையில் பிரதிபலிப்பு: தேஜஸ்வி கருத்து

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம், 72 பேர் கொண்ட அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இடம் கூட வழங்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், ‘‘தெளிவான வெறுப்பின் அறிகுறியாகும். அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. மணிப்பூர் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தாமதமாக குரல் கொடுத்துள்ளார். பிரதமர் தனது பங்கிற்கு அந்த மாநிலத்தில் வன்முறையாக இருந்தாலும் சரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டமாக இருந்தாலும் ஒவ்வொரு நெருக்கடியிலும் மவுனம் காத்து வருகிறார்” என்றார்.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது