இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம்; இம்ரான்கான், மனைவிக்கு தலா 7 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பிப்.8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரான்கான் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இம்ரான்கான் மீதான அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் 10 ஆண்டுகளும், தோஷகானா வழக்கில் 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.

தோஷகானா வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீவிக்கும் 14 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக இம்ரான்கானும், அவரது மனைவி புஷ்ரா பீவியும் திருமணம் செய்து கொண்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான்கான்,அவரது மனைவி புஷ்ரா பீவியிடம் நேற்று முன்தினம் 14 மணி நேரம் நீதிபதி குத்ரதுல்லா விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்ததாக கூறி தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!